அதிமுக உடைந்து அமமுக என்கிற கட்சி உருவானபோது, டி.டி.வி. தினகரனை நம்பி வேலூர் மாவட்டத்தில் அதிமுகவில் இருந்த பிரபல நிர்வாகிகளான முன்னாள் மா.செவும், எம்.எல்.ஏவுமான நீலகண்டன், முன்னாள் கிழக்கு மா.செ சிவசங்கரன், வேலூர் மத்திய மாவட்ட துணை செயலாளர் சிங்கப்பூர். நடராஜன், அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ கலையரசன், வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் உட்பட பலரும் அங்கு சென்றனர்.
அங்கு சென்ற பலருக்கும் தினகரனின் கட்சி நடத்தும் விதத்தை பார்த்து அதிருப்தியே மிஞ்சியது. இதனால் பலரும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் சிவசங்கரன், சிங்கப்பூர்.நடராஜன் இருவரும், அதிமுக கிழக்கு மா.செவும், அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏவுமான சு.ரவி மூலமாக எடப்பாடியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் இரண்டு முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமமுகவில் இருந்து கட்சி மாற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுகவுக்கு செல்வதா?, திமுகவுக்கு செல்வதா? என குழப்பத்தில் தங்களது ஆதரவாளர்களிடம் ரகசியமாக ஆலோசனை நடத்திவருகின்றனர் என்கின்றனர் அமமுக வட்டாரத்திலேயே.