Skip to main content

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா விஷால்...? ரஜினி மன்றத்திற்கு பணத்தாசை காட்டிய ஏ.சி.எஸ்?

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

வேலூர் தொகுதி நாடாளமன்ற தேர்தலில் சின்ன சின்ன அமைப்புகளை கூட விட்டுவைக்காமல் தனக்கு ஆதரவாக செயல்படவைக்கிறார் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம். கடந்த ஜுலை 22ந்தேதி நடிகர் விஷாலின் வேலூர் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் மற்றும் மன்றத்தின் சில நிர்வாகிகளோடு வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை அவரது பென்ஸ் பார்க் ஹோட்டலில் சந்தித்து தனது லட்டர் பேட் தந்து வேலூர் மாவட்ட விஷால் நற்பணி மன்றத்தின் ஆதரவு உங்களுக்கு தான் என கையெழுத்திட்ட கடிதத்தை தந்துள்ளார்.


அதிமுகவிற்கு எதிரானவராக கட்டமைக்கப்பட்டுள்ளார் நடிகர் விஷால். இந்நிலையில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு விஷால் ஆதரவு தெரிவிக்கிறாரா என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

vellore election ac shanmugam


 

இதுப்பற்றி விசாரித்தபோது, சின்ன சின்ன குழுக்கள் கூட தனக்கு ஆதரவாக செயல்பட வைக்க ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் ஏ.சி. சண்முகம். இவர்களின் வேலையே சமூக அமைப்புகள், சாதி சங்கங்கள், மத அமைப்புகள், சின்ன சின்ன ஏரியா குழுக்கள், சமூக வளைத்தள குழுக்கள் போன்றவற்றை ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக செயல்படவைக்கும் வேலையில் ஈடுப்பட்டுள்ளது ஏ.சி. சண்முகத்தின் குழு. நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என அவர்களின் லட்டர் பேட் டில் எழுதி கையெழுத்திட்டு தந்தால் அந்த சங்கத்தின் பலத்தை பொருத்து கணிசமான பண கவனிப்பும் உண்டு என்கிறார்கள். இப்படி தினமும் 10 குழுவாவுது வந்து ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டு மகிழ்ச்சியோடு செல்கிறார்கள்.


ஏ.சி.சண்முகத்துக்கு சினிமா துறையினரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த வகையில் சினிமா நடிகர்களான ரஜினிகாந்த் உட்பட சிலரை சந்தித்து ஆதரவு கேட்டார். அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. இருந்தும் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை இழுத்து தனது ஆதரவு என அறிக்கை விடச்சொல்ல அவர்கள் மறுக்க, அதன் நிர்வாகிகள் சிலருக்கு பணத்தாசை காட்டி தனக்காக வேலை செய்ய வைத்துள்ளதாக கூறுகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினரே. அந்த வகையில் தான் விஷால் ரசிகர் மன்றம் தரப்பு ஆதரவு தெரிவித்துயிருக்கலாம் என கூறப்படுகிறது.


விஷால் ரசிகர் மன்ற மாவட்ட தலைமை, பணத்துக்காக இப்படி ஆதரவு தெரிவித்ததா அல்லது விஷால் சொல்லி இந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததா என்பதை விஷால் சொன்னால் மட்டும் தான் தெரியும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்