வேலூரில் பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், காட்பாடியில் இருந்து வேலூர் செல்ல தனது நண்பருடன் காத்திருந்த பெண் மருத்துவரை ஆட்டோவில் ஏமாற்றி அழைத்துச் சென்று ஐந்து பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த பெண்ணின் நண்பரின் கை, கால்களையும் கட்டிப்போட்டு விட்டு ஐந்து பேரும் செய்த கொடுஞ்செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் அனைவரையும் போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். இதனையேற்று, ஐந்து பேரில் ஒருவன் சிறுவன் என்பதால், அச்சிறுவனைத் தவிர்த்து, எஞ்சிய நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.