கல் மனம் கொண்ட தாய்மார்கள் இன்னமும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் சில மக்கள்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு – ஆரணி சாலையில் அரிசி, நெல் மண்டி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு முன்பாக நீண்ட தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் செல்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது.
மே 19ந்தேதி மாலை அந்த வழியாக சென்றவர்களின் கவனத்தை அந்த கால்வாய் ஈர்த்தது. பச்சிளம் குழந்தை பிறந்து ஓரிரு நாளே ஆன குழந்தை கால்வாயில் இறந்துபோய் தலை குப்புற கிடந்தது. அதோடு அதன் உடல்களில் அங்கங்கு கொசுக்கள், ஈக்கள், எறும்புகள் தின்றதால் ஓட்டைகள் விழுந்திருந்தன. பார்க்கவே அகோரமான நிலையில் அந்த குழந்தையின் உடல் இருந்தது. இதனைப்பார்த்து அவ்வழியா சென்றவர்கள் கண்ணீர் வடித்தனர்.
கால்வாயில் குழந்தை இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே ஆற்காடு நகர காவல்நிலையம் உள்ளது. அங்கு சென்று தகவல் தர, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். அந்த குழந்தையை பெற்றெடுத்த தாய் யார், குழந்தை எங்கு பிறந்தது, இங்கு தான் குழந்தையை வீசினார்களா, வேறு எங்காவது வீசியது தண்ணீரில் அடித்துக்கொண்டு இங்கு வந்தது என விசாரிப்பதோடு, அந்த சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்க்கவும் முடிவு செய்துள்ளனர்.
பிறந்தவுடனே குழந்தையை கால்வாயில் போட்டு கொலை செய்யும் அளவுக்கு ஒரு தாய் இருக்கிறாள் என்றால் அந்த தாயை மட்டும்மல்ல அவளது குடும்பம், இதற்கு காரணமானவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்றார்கள் மக்கள்.