Skip to main content

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது;விவசாயிகள் மகிழ்ச்சி

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது;
விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஏரியை குடிநீர் தொட்டியாக பயன்படுத்தகூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தமிழகத்தின் மிக பெரிய ஏரியாகும்.  இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வட வாறு வழியாக விநாடிக்கு 1480 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென் னைக்கு குடி நீர் தேவைக்காக விநா டிக்கு 72 கன அடி தண் ணீர் அனுப்பப்படுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி உள்ள நிலையில் தற்போது ஏரியின் நீர் மட் டம் 46.95 அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரி நிரம்பியுள்ளதால் கடல் போல் காட் சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் விவசாயிகள் ரவிச்சந்திரன் கூறுகையில் வீராணம் ஏரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழுகொள்ளவை எட்டியுள்ளது. விவசாயிகள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது போல மழைகாலங்களில் மழைநீரை தேக்கி சென்னைக்கு குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தும் மன நிலையில் உள்ளனர். வீராணம் ஏரியை குடிநீர் தொட்டியாக பயன்படுத்தும் நிலையை மாற்றிகொள்ள வேண்டும். இந்த ஏரியை நம்பி காட்டுமன்னார்கோவில், சிதம்பரம்,புவனகிரி வட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு தேவையான தண்ணீரை கடைமடைவரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்துவிட்டு மீதியுள்ள உபரி நீரை குடிநீருக்கு அனுப்பவேண்டும் என்றார்.  

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்