Skip to main content

வீராணம் ஏரியில் கருப்பு நிறத்தில் பொங்கி வரும் தண்ணீர்- அச்சத்தில் பொதுமக்கள்

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
வீராணம் ஏரியில் கருப்பு நிறத்தில் 
பொங்கி வரும் தண்ணீர்- அச்சத்தில் பொதுமக்கள்



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக ராதா மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கருப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருகிறது.  மேலும்  அந்த இடத்தை சுற்றி எண்ணைப் படலம் போல் படர்ந்து உள்ளதால் சுனாமி அறி குறியாக இருக்கலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து  பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய போது சென்னையில் உள்ள ஆய்வகத்தில் தெறிவித்து இருப்பதாகவும் வரும் திங்கள் செவ்வாய் கிழமைகளில் நேரில் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் எரிவாய்வு வெளியேறுகிறதா அல்லது  வேறு எதாவது ஆபத்து வருவதற்கான அறிகுறியா? அதற்கு முன் சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடந்து ஏரியில் தண்ணீர் பொங்கி வருவதால்  இந்த பகுதியில் பரபரப்பாக  உள்ளது.

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்