கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அகரம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் தனது சொந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் அவ்வூர் கிராம நிர்வாக அலுவலரான ஆனந்தராஜ் (வயது 30) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு விஏஒ பட்டா மாற்றம் செய்ய ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து செந்தில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் கூறியுள்ளார்.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/fzHUYXqXwsxeADFfWwzTaUbGF_9plD2TuEjqFbhx1xY/1550789406/sites/default/files/inline-images/vao_0.jpg)
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சங்க அலுவலகத்தில் அமர்ந்திருந்த ஒட்டிமேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தராஜிடம் அட்வான்ஸ் தொகையாக ஐந்தாயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஒ ஆனந்தராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விஏஒ ஆனந்தராஜ் சொந்த ஊர் விருத்தாசலம் அருகிலுள்ள கம்மாபுரம், அவரது தந்தை பாலகிருஷ்ணன் கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி கொண்டு இருந்தபோது இறந்துவிட்டார்.
தந்தை இறந்ததால் வாரிசு அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளார் ஆனந்தராஜ். கைது செய்த விஏஒவை போலிசார் மேலும் விசாரணைக்காக கடலூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.