வேலூர் மாவட்டம், வாணியம்பாடி முஹம்மதலி பஜார் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் எஸ்.எம். காதர். இவர் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க அக்டோபர் 19 ந்தேதி சென்றுள்ளார்.

அவர் இரண்டு முறை பணம் எடுக்க முயற்சித்தபோது பணம் வரவில்லை. அருகில் இருந்தவர் உங்கள் வங்கி ஏ.டி.எம் கார்டை தாருங்கள் என வாங்கி இப்படி பயன்படுத்துங்கள் எனச்சொல்லி பணம் எடுத்து தந்துள்ளார். கார்டை எடுத்து தரும்போது காதரின் கார்டை தராமல் வேறு கார்டை தந்துள்ளார். அவரும் வாங்கிக்கொண்டு கிளம்பி கடைக்கு சென்றுள்ளார்.
கடைக்கு சென்ற சற்று நேரத்தில் காதர் வங்கி கணக்கில் இருந்து சுமார் 16 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு வந்து வங்கி ஊழியர்களிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லையாம். உங்க கார்டு, உங்க பின் நம்பர் அது எப்படி மத்தவங்களுக்கு தெரியும் எனக்கேட்டுள்ளார்கள்.
அதன் பின் "அவன் தான் ஏமாற்றியிருப்பான்" என முடிவு செய்து வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.