Published on 28/10/2019 | Edited on 28/10/2019
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 88 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து 70 மணி நேரமாக மீட்புப்பணி தொடர்கிறது. இந்நிலையில் சுர்ஜித் மீண்டுவர வேண்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

"சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே"