Published on 19/04/2021 | Edited on 19/04/2021

தமிழகத்தில் நாளை (20.04.2021) முதல் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 04.00 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இரவுநேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
இரவுநேர ஊரடங்கின்போது ரயில் போக்குவரத்து இருக்குமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில், இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.