Published on 16/02/2018 | Edited on 16/02/2018

ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாத வைரமுத்து மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் முருகானந்தம என்பவரின் புகாரில் வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி வைரமுத்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், வழக்குக்கு ஜனவரி 19 இடைக்கால தடை விதித்திருந்தார்.
இதற்கிடையில், வைரமுத்து வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளக்கோரியும், வைரமுத்து மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபித்தும் ஜி.தேவராஜன், கே.யுவராஜ், ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வைரமுத்து மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை மார்ச் 2க்கு ஒத்திவைத்தது.
- சி.ஜீவா பாரதி