கடந்த பிப்ரவரி 16-ஆம் நாள் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாமால் மூன்று மாதம் அவகாசம் நீட்டிப்பு மற்றும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும் மனுதாக்கல் செய்தது. அதை தொடர்ந்து தமிழக அரசு குறிப்பிட்ட காலக்கெடுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென்று புதுச்சேரி அரசும் இடைக்கால மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்தது. இந்த மனுக்கள் எல்லாம் ஒரே வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த வழக்குக்கான விசாரணை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர்,சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க இருக்கிறது. இன்றைய உச்சநீதிமன்ற வழக்குகளின் துணைப் பட்டியலில் காவிரி வழக்கானது 42-வது இடத்திலுள்ளது.