காஞ்சிபுரத்தில் வடகலை தென்கலை ஆகிய இரண்டு பிரிவினர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படும் நிலையில் இந்த முறையும் வடக்கலை தென்கலை பிரிவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருப்பது காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற அஷ்டபுஜ பெருமாள் கோவில். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு நடைபெற்றது. இதற்காக சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. தென்கலை பிரிவினரே கோவிலில் திவ்ய பிரபந்த பாடுவதற்கு முன்னுரிமை பெற்றிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அங்கு வந்த வடகலை பிரிவினரும் தாங்களும் பாடுவோம் என வாக்குவாதம் செய்தனர். காலம் காலமாகவே வடகலை தென்கலை பிரிவு பிரச்சனை இருந்து வரும் நிலையில் வைகுண்ட ஏகாதசியில் இன்றும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.