மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகமான தாயகத்தில் இன்று (20.10.2021) நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ, தான் எப்போதும் பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அப்படி பதவியை எதிர்பார்த்து காத்திருந்தால் வாஜ்பாய் ஆட்சியின்போதே எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்று பேசியுள்ளார்.
கடந்த 1977ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், திமுக சார்பாக நான்குமுறை மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியைத் தாண்டி வேறு பெரிய பொறுப்புகளில் இதுவரை அவர் பணியாற்றியது இல்லை.