Published on 28/11/2018 | Edited on 28/11/2018
திமுக கூட்டணி குறித்த சர்ச்சைகள் கிளம்பியிருந்த நிலையில் இன்று தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வருகிறார்.
ஏற்கனவே 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்ற மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்தது. அதேபோல் அண்மையில் திமுக பொருளாளர் துரைமுருகன் விசிக மற்றும் மதிமுக ஆகியவை கூட்டணியில் இன்னும் சேர்ப்படவில்லை, நாங்கள் ஒத்த கருத்துடையவர்களே தவிர கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது வைகோ ஸ்டாலினை சந்தித்து வருகிறார்.