மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஓட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி மறைந்தார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'கட்சியின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். மதிமுகவால் 3 நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24ம்தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் ஒத்தி வைக்கப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வைகோ, துரை வைகோ மற்றும் மல்லை சத்யா ஆகியோர் அவரது உடலை சுமந்தனர்.