சென்னையில் 2வது நாளாக கரோனா தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருவதால் 2வது நாளாக இன்றும் (10.07.2021) தடுப்பூசி போடப்படும் முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை 15 மாநகராட்சி மண்டலங்களில் 45 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசிகள் போடப்பட்டுவந்தன.
ஏற்கனவே கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் சிறப்பு முகாம்களுக்கு காலை நேரத்தில் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், அதேபோல் உடலுழைப்பு தொழிலாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அதிகம் முன்வந்திருக்கும் நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 26 லட்சத்து 75 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.