செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தியால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பது குறித்து பார்ப்போம்!
தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
கரோனா தடுப்பூசிகளைத் தவிர வேறு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திடலாம்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தமிழகத்திற்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த ரூபாய் 2,500 கோடி மேல் செலவாகும்.
ஆனால், தமிழகத்தில் உற்பத்தியைத் தொடங்கினால் தடுப்பூசிக்கு ஆகும் பெரும் செலவைக் குறைத்திட முடியும்.