கடந்த 20ம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்த ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எதிர்ப்பும்,ஆர்ப்பாட்டம் நடத்தியும் வந்த நிலையில் இன்று காலை இராமேஸ்வரத்திலிருந்து ஈசிஆர் வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி வழியாக தூத்துக்குடிக்கு செல்ல இருந்தது ரதயாத்திரை.
ரத யாத்திரை செல்லும் பகுதியில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் உள்ளதால் இப்பகுதியில் செல்ல அனுமதி மறுத்த காவல்துறையினர் மாற்று பாதை வழியாக உத்திரகோசமங்கை, சிக்கல் வழியாக தூத்துக்குடி செல்ல அனுமதித்தனர்.
இதனால் இந்து அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது. காவல்துறை அனுமதி கொடுத்த வழியில் மட்டும் செல்லுங்கள்; இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா,கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோர் எச்சரித்தனர். இதையடுத்து காவல்துறை அனுமதித்த வழியில் சென்றனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கம்னியூஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம்தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தனர்.
- பாலாஜி