Skip to main content

5 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி - சுகாதாரத்துறை அறிவிப்பு!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

df

 

இந்தியாவின் சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 

மார்ச் முதல் தேதியில் இருந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 1.08 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்