Skip to main content

சிகிச்சையின்றி தாயின் வயிற்றிலேயே மரணமடைந்த சிசு: அரசு மருத்துவமனை அவலம்

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
சிகிச்சையின்றி தாயின் வயிற்றிலேயே மரணமடைந்த சிசு: அரசு மருத்துவமனை அவலம்



          உத்திரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 74 குழந்தைகள் பலியான சம்பவம் தேசத்தையே உலுக்கியது ஒரு புறம் என்றால் தமிழகத்தில் டாக்டர்களின் அலட்சியத்தால் உரிய சிகிச்சைக்காக பிரவசத்திற்காக அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணி தாயின் வயிற்றிலேயே சிசு மரணமடைந்து அதிர்வைக் கிளப்பியிருக்கிநது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலுள்ள சங்குபுரம் 3ம் தெருவைச் சேர்ந்த காமாட்சி சென்னையில் கூலி வேலை பார்த்து விட்டு தற்போது சங்கரன்கோவில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். வீட்டு வேலை பார்ப்பவர் இவரது மனைவி உமாதேவி. இவர்களது மூத்த மகள் ராமலெட்சுமியை தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சமீபம் உள்ள ஓனங்குளம் கிராமம் தையல் தொழிலாளி காந்திராசனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர் இவர்களுக்கு ஏற்கனவே, 4 வயது மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் இரண்டாவதாகக் கர்ப்பம் தரித்த ராமலெட்சுமி பிரவத்திற்காக சங்கரன்கோவிலில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அங்கே நடந்தது பற்றி ராமலெட்சுமியின் தாய் உமாதேவி கண்ணீர் மல்கச் சொல்லுவது.



2வது பிரவசத்திற்காக வந்த எனது மகளை சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கூட்டிப் போனேன் அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் ஆகஸ்ட் 11ம் தேதி குழந்தை பிறக்கும்  என்றார்கள். ஆனால் ஜீலை 26ம் தேதி வலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனைக்குப் போனப்ப, சோதிச்ச டாக்டர் 27ம் தேதிக்கு அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தி ஊசி போட்டதால் வீடு திரும்பினோம். ஆனா மதியமே வலி வந்தறுச்சி. உடனே ஆஸ்பத்திரிக்கு வந்து நர்சம்மாட்டச் சொன்னப்ப நாளைக்கித்தான அறுவை சிகிச்சை, நாளையே வாங்க யிப்ப அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிப்புட்டாக. அதனால மகளோட வீடு திரும்பி விட்டோம். அன்னைக்கி ராத்திரி பதினோரு மணிக்கு மீண்டும் பிரசவ வலி எடுத்தப்ப உறவுக்காரவுக துணையோட மருத்துவ மனைக்கிக் கூட்டியாந்தேன். அப்ப சோதிச்ச டாக்டர் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாகச் சொன்னதும். படக்குன்னு ஆயிப் போச்சு. காலைல சோதிச்சப்ப குழந்தை நல்லாயிருக்குன்னு சொன்னவுக, இரவுல இறந்து போச்சுன்னு சொன்னது பதற வைச்சிடுச்சி உடனே சிகிச்சை செய்திருந்தா குழந்தை பொழைச்சிருக்குமே அலட்சியப் படுத்திட்டாக அப்பால. இறந்த குழந்தையை அறுவை சிகிச்சை பண்ணித்தான் எடுக்கணும்னு  பாளை அரசு மருத்துவமனைக்கி அனுப்பி வைச்சுட்டாவ. மதியமே சிகிச்சை பண்ணியிருந்தா குழந்தை பொழைச் சிறுக்குமே. செய்யலியேய்யா என கண் கலங்கிய தாய் உமாதேவி மருத்துவமனை ஆய்வுக்கு வந்த அமைச்சர் ராஜலெட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா. மில்லயன் டாலர் கேள்வி.
-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்