Skip to main content

ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது; மேகதாது விவகாரத்தில் எடப்பாடி விளக்கம்!

Published on 19/08/2017 | Edited on 19/08/2017
ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது;
மேகதாது விவகாரத்தில் எடப்பாடி விளக்கம்!


தமிழ்நாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியதாக ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது தவறானது. கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. சமதள பரப்பாக உள்ள தமிழகத்தில் புதிய அணைக்கட்டுவது சிரமம் என தமிழக அரசு வாதாடியது. தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதற்கு தக்க இடத்தில் ஒரு அணையை கட்டி அதனை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தினை முன் வைத்து நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய தலைமை வழக்கறிஞர் இதற்கான நிலைப்பாட்டினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியதாக ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைக்கு மாறானது. தமிழக அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்