Skip to main content

ஒருமையில் பேசும் அமைச்சர் செல்லூர் ராஜீவை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
ஒருமையில் பேசும் அமைச்சர் 
செல்லூர் ராஜீவை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

ஆய்வு கூட்டங்களில் அமைச்சர் செல்லூர்ராஜு ஒருமையில் பேசுகிறார் என்பதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூரில்  உள்ள  கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக நடந்த அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ‘’ ஆய்வு கூட்டங்களில் துறை அலுவலர்களை, ஊழியர்களை  அமைச்சர் செல்லூர்ராஜு ஒருமையில் பேசுவதும், அச்சுறுத்தும் வகையிலும் பேசுவதையும் கண்டித்து 18 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு இல்லாமல் இருந்து வரும் சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும், என்றும்  மண்டல அளவில் விழிப்பு பணி குழுவிற்கு தனியாக துணை பதிவாளர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும், வட்டார அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தவிர பிற சங்கங்களை ஆய்வு செய்திட கூடுதலாக ஒரு கள அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும், என்றும். 21 மாத ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், புதிய ஒய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் செய்தனர்.

- க.செல்வகுமார்  

சார்ந்த செய்திகள்