
அண்மையில் மதுரையில் ஆன்மீக சுற்றுலா வந்த ரயிலில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் ரயிலில் சிலர் சிலிண்டரை ஏற்றி வந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிலிண்டரை ரயிலில் ஏற்ற அனுமதித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் சிலிண்டர் மற்றும் வீட்டில் சமையல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சிலிண்டரை சிலர் ரயிலில் ஏற்றி செல்கின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கும் நிலையில் ரயிலில் சிலிண்டரை ஏற்ற யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைக் கண்டு கொள்ளாமல் விட்ட ரயில் வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.