‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வரும் 14 ஆம் தேதி அமைச்சராகிறார்’ என நக்கீரனில் ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இந்தத் தகவலை ஆளுநர் மாளிகை உறுதி செய்துள்ளது. தமிழக முதல்வர் கொடுத்த பரிந்துரையை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்க தமிழக முதல்வர் கொடுத்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.