திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக டிசம்பர் 27ந்தேதி நடைபெறும் வாக்குபதிவில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செய்யார், அனக்காவூர், வெம்பாக்கம், தெள்ளார், பெரணமல்லூர் என 9 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 9 ஒன்றியங்களில் மொத்தம் 1930 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 181 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 498 கிராம ஊராட்சித்தலைவர்; பதவியிடங்களுக்கும் மற்றும் 3480 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை, போளுர், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, சேத்பட்டு ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறும். இங்கு மொத்தம் 1590 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்களில் உள்ள 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 160 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 362 கிராம ஊராட்சித்தலைவர் பதவியிடங்களுக்கும் மற்றும் 2727 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குபதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.