Skip to main content

இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலுக்கும் வாய்ப்பு?

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
rain

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 17 ஆம் தேதி காலை சென்னை அருகே கரையை கடந்தது. அதற்கு முந்தைய நாளான 16 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் கனமழை பொழிந்தது.

இன்றும் (18/10/2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது. அதேபோல் அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வலுவடைந்து  மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்திய பகுதியை விட்டு நகர்ந்து செல்லும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்