
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது என்றும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும், ஓரிரு தினங்கள் முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று (டிச.20) முதல் டிச.24 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வரை காற்று வீசக்கூடும். சில சமயங்களில் இந்த காற்று 55 கிமீ வரை கூட சூறைக்காற்று வீசும் என்றும், இதன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.