Skip to main content

வானத்திலிருந்து குதித்த தேவதூதர்களா? டி.டி.வி. தினகரன்

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
ttv dinakaran interview


அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை பெங்களூவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

நீட் தேர்வுக்கு விலக்கு கொடுத்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அடுத்த வருடம் மே மாதத்திற்குள் கண்டிப்பாக நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கும். அப்போது மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை தமிழகம் தான் தீர்மானிக்கும். அப்போது யார் வருவதாக இருந்தாலும் அவர்களிடம் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுக்க வேண்டும்.

 

 

 

காவேரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து சரியாக நடத்த வேண்டும். கூடங்குளம் மக்கள் அணுஉலையை விரும்பவில்லையென்றால் அதனை சரிபடுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வேண்டும். காவேரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. மூலம் கேஸ் எடுப்பது, மீத்தேன் ஹட்ரோ கார்பன் திட்டங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். 
 

தமிழக மக்கள் ஏற்றுகொள்ளாத, விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஆதரவு தரப்படும். தமிழக மக்களின் சார்பாக அது கண்டிப்பாக நடக்கும். என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதன்பிறகு தமிழக பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும். மத்தியில் தமிழகத்தை பாராமுகத்துடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதால், தற்போது என்னதான் போராட்டம் நடத்தினாலும் அதற்கு தீர்வு கிடைக்காது.

 

 

 

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஆந்திரா, டெல்லியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். சி.பி.எஸ்.இ- யை வானத்திலிருந்து குதித்த தேவதூதர்கள் நடத்தும் போர்டு போல சொல்கிறார்கள். அவர்கள் மீது டெல்லி போலீசில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் எந்த பாடத்திட்டம் நாம் பாடக்கிறோமோ, அந்த பாடத்திட்டத்தை பின்பற்றி கேள்வித்தாள் இல்லாமல் வேறு கேள்விகளை கேட்டால் யாரால் தான் அதற்கு பதிலிக்க முடியும். 
 

மாணவி அனிதா அதுவும் ஒரு கிராமத்து பெண் 1,176 மதிப்பெண் எடுத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த பெண்ணால் வெற்றி பெறாததற்கு இதுதான் காரணம். மாணவி பிரதீபா, எங்கள் கட்சியின் செஞ்சி ஒன்றிய மாணவரணிச் செயலாளரின் அண்ணன் மகள். போன வருடம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துகல்லூயில் பணம் கட்ட முடியாததால், இந்த வருடம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாததால் விரக்தியில் இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார். 
 

அதற்காக நான் தற்கொலையை ஆதரிக்கவில்லை. மாணவர்களுக்கு அவர்களின் மாணவ பருவத்தில் கவனமாக இருந்ததை, நிஜமாக்க மாற்ற முயற்சி செய்கிறார்கள். முடியவில்லையென்றதும் சிலபேர் இதுபோன்ற தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது. கிராமப்புற மாணவ, மாணவிகள் சாதாரண குடும்ப சூழ்நிலையிலிருந்து வருபவர்கள் மருத்துவராக படிக்க வருவதற்கு நீட் தேர்வு தடையாக உள்ளது என்பது தான் உண்மை.

 

 

 

சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிப்பவர்களும் சென்னை போன்ற பெருநகர்களில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பை மேற்கொள்ள முடியும் என்கிற நிலைமை வருகிறபோது சமூக நீதி எப்படி காப்பற்றப்படும். ஒரு குறிபிட்ட இனத்தில் உள்ளவர்கள் மட்டும் வளர்ந்து மற்ற இனத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவது நல்லதில்லை. இவ்வாறு கூறினார். 


 

சார்ந்த செய்திகள்