Skip to main content

’உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்’-கொடநாடு விவகாரத்தில் டிடிவி தினகரன்

Published on 17/01/2019 | Edited on 17/01/2019
ttv

 

திருவாரூரில்  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,  கஜா புயல் காரணம் காட்டி திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமோக வெற்றி பெறும்.

 

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளனர். கூட்டுறவு தேர்தலின்போது 60க்கு 40 என்ற சதவீதத்தில் தேர்தல் உடன்பாடு வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தினர். 

 

கொடநாடு கொலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து முதல்வர்  பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வருக்கு பயம் பதற்றம் உள்ளது தெரிகிறது.

 

கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்பமறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு.  உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை, எப்படி பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவு கண்காணிப்பது போன்று கண்காணிக்க வேண்டும். சரியான விசாரணையை அடுத்து உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

நாடாளுமன்ற தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நெருக்கத்தில் கட்சிகள் மற்றும் இட பகிர்வு குறித்து கூறப்படும். கட்சிகளின் பெயர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தெரிவிக்கப்படும். கூட்டணிகள் அமையாவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2014இல் அதிமுக தனித்து போட்டி வெற்றி பெற்றது போன்று தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும்.

 

தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் நலனில் அக்கறை கொள்ளவில்லை எனவே மத்தியில் உள்ள தேசிய தேசிய கட்சிகள் பதிலாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வோம்". என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்