ரயில் நிலையத்தை முற்றுகையிட முயற்சி: நாம் தமிழர் கட்சியினர் கைது
மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள்தான் காரணம் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றிட வலியுறுத்தியும், மதுரை ரயில் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஷாகுல்