Skip to main content

'பெரியார் சிலை அவமதிப்பு- நடவடிக்கை எடுக்கப்படும்': துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

trichy periyar statue deputy cm palanisamy tweet

'பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

 

திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணிகண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்