ஹஜ் யாத்திரைக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களுடன் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஹஜ் யாத்திரைக்குப் பயணம் செய்ய விரும்புவோர் வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் தங்கள் பாஸ்போர்ட் விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதிவரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
திருச்சி மரக்கடையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்கனவே அனுமதி வழங்குவதற்கு விண்ணப்பித்தும் அதைப் பெறாத ஹஜ் பயணிகள் நேரில் வந்து தங்கள் விவரங்களைக் கேட்டு அறியலாம். ஹஜ் பயணிகள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மனுவாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்கலாம். இதற்காக சிறப்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் வருகிற ஜனவரி மாதம் 31ஆம் தேதிவரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக அனுமதி வழங்குவதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஒப்புகை சீட்டு அல்லது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் நகலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.