திருச்சி மாவட்டம், உறையூர் மீன் மார்கெட்டில் ஏற்பட்டிருந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மீன் மார்கெட்டில் இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மீன் கழிவுகளால் அப்பகுதியில் குப்பைகள் அதிகம் காணப்பட்டதால், அவற்றை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மேலும் மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீர்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதோடு மாநகராட்சி குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும் என்றும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கடைக்காரா்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர், மற்றும் உதவி ஆணையர்கள், மற்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.