திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி ரூபாய்13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் (45), அவரது சகோதரி மகன் சுரேஷ் (28) மற்றும் மடப்புரம் மணிகண்டன் (34) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சுரேஷை அக்.14- ஆம் தேதி காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சுரேஷ் மீது திருச்சி பாலக்கரை, கொள்ளிடம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீ ரங்கம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கொள்ளையன் முருகனை போலீசார் இன்று (08.01.2020) ஆஜர்ப்படுத்தினர். அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் முருகனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரினர். இதையடுத்து முருகனை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.