தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை என்னுடைய பதவி பறிபோகாது என்கிற உறுதியாக நம்பியிருந்த திருநாவுகரசர் தலைவர் பதவி தீடிர் என அதிரடியாக நீக்கப்பட்டு யாரும் எதிர்பார்க்காத ப. சிதம்பரத்தின் ஆதரவாளர் கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். பதவி ஏற்று முடிந்த அடுத்த சில நாட்களிலே திருநாவுக்கரசர் எஸ்.டி.ராமச்சந்திரன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைமை நியமிக்கப்பட்டிருப்பதால், புதிய தலைமைக்கு வழிவிட்டு எனது “மாநில ஒருங்கிணைப்பாளர்” பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ராஜினாமா செய்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை மாற்றத்திற்கு பிறகு திருச்சியில் முதல் பொதுகூட்டத்தை திருச்சியில் முடிவு செய்திருக்கிறார். அதுவும் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள செடல்மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பொது திடலில் முதல் பொதுகூட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த கூட்டம் வருகிற 19ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது என்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். திருச்சி எம்.பி தொகுதியை குறித்து வைத்து தான் திருச்சியில் முதல் பிரச்சார பொது கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் லோக்கல் காங்கிரஸ் கட்சியனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் ஜவஹர் தலைமையில் பொதுகூட்டத்தின் அனுமதிக்காக காவல்நிலையத்தில் கொடுத்திருக்கிறார்கள்.