
கணவனோ மனைவியோ இருவரும் மூன்றாம் நபருடன் கள்ளதொடர்ப்பு வைத்து கொள்வது கிரிமினல் குற்றம் இல்லை என செப்டம்பர் 27 ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், இந்திய நாட்டின் பாரம்பரிய நிகழ்வாக ஒருவனுக்கு ஒருத்தி என நடைபெறும் திருமணத்தை இழிவுபடுத்தும் நோக்கில், சமுதாய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக அமைந்து இருப்பதால் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் திருமணத்துக்குப்பின் யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்வதை எதிர்ப்பதாக கூறி வாணியம்பாடி அடுத்த ஜனாதபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் திடீரென மண்ணெண்ணெய் தனது உடம்பில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக நகர போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.