Skip to main content

தங்கம் கடத்தல்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுங்கத் துறை ஆய்வாளர் 

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Trichy  Customs Inspector Dismissed  in gold case

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தொடர் தங்கக் கடத்தல் சம்பவம் நடந்துவருகிறது. கிலோ கணக்கில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்படுவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மாதத்தில் தங்கம் கடத்தலுக்குத் துணை போனதாக சுங்கத்துறை அதிகாரி ஒருவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

 

கடந்த வாரம் 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட நிலையில், மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தைப் பறிமுதல் செய்ததோடு, அதைக் கடத்தி வந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களைக் கைது செய்தனர். 

 

இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதற்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை ஆய்வாளர் அசோக் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்