மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மெரினாவில் 50 கோடி மதிப்பில் பிரமாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் பறவையின் இறக்கை போன்று நுழைவுவாயில் பகுதி வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஜெ., நினைவிட கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் வரும் பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜெ., பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது நினைவிடத்தை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
இந்நிலையில், ஜெ., நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்ற பகுதியை பொருத்துவதற்காக துபாயில் இருந்து கட்டிக்கலை நிபுணர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களின் மேற்பார்வையிலும், ஆலோசனையின் பேரிலும் பீனிக்ஸ் பறைவையின் இறக்கை போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.