திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 51 ஐ சேர்ந்த பீமநகர் வடக்கு எடத்தெரு, தேவர் புதுத்தெரு , பொன்விழா தெரு ஆகிய பகுதிகளில் திருச்சி மேயர் மு.அன்பழகன், மண்டலத் தலைவர் த. துர்கா தேவி, உதவி ஆணையர் தி ச.நா. சண்முகம், உதவி செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் பொது மக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி மற்றும் குடிநீர் அடி பம்பு கேட்டு கோரிக்கை வைத்தார்கள். அதனை உடனடியாக செய்து தர அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்கள். மேலும், பொன்விழா தெருவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு பணியினை விரைந்து முடித்து தரும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
வார்டு எண் 64, குறிஞ்சி நகர் மற்றும் பாண்டியன் நகர் பகுதியில் குடியிருப்பு நல சங்கத்தினர் மேயரிடம் மனு அளித்தார்கள். அப்பகுதிக்குச் சென்ற மேயர் குடியிருப்பு நல சங்கத்தினருடன் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடியிருப்ப நலச் சங்கத்தினர் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் புதைவடிகால் திட்ட பணிகளை விரைந்து முடித்து தரவும் சாலை அமைத்து தரவும் பூங்கா புதிதாக அமைத்து தரவும் குடிநீர் கூடுதல் நேரம் கேட்டு ஆலோசனை தெரிவித்தார்கள். மேயர் குடிநீர் கூடுதல் நேரம் கொடுக்கும்படி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிக்கப்பட்டவுடன் சாலைகள் அமைத்து தருவதாக உத்தரவிட்டதை ஏற்றுக்கொண்ட குடியிருப்பு சங்கத்தினர் மேயருக்கு நன்றியை தெரிவித்தார்கள்.
குடியிருப்பு நலச் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மண்டல. தலைவர் திருமதி. துர்கா தேவி, உதவி ஆணையர் திரு. ச.நா. சண்முகம், உதவி செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் குடியிருப்பு நல சங்க தலைவர், செயலாளர்கள் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக சாத்தனூரில் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக் பார்வைக்கு அப்பகுதி பொது மக்களுக்கு அடிப்படை மருத்துவத்தை தினந்தோறும் வழங்க ஆலோசனை வழங்கினார்.