![sajan singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zxr9CT2AuyQgtZVR8ZBDKUbEWtINGzFMjLjnkqru8iA/1609828272/sites/default/files/inline-images/sajan-singh_0.jpg)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Roll observer) சஜன்சிங் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு முறையைக் களைதல், விடுபட்ட பெயர்களைச் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் போன்ற பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2020 நவம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெண்கள் - 11,60,256, ஆண்கள் - 10,99,977 மூன்றாம் பாலினத்தவர் - 206 என மொத்தம் 2,26,0439 வாக்காளர்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இம்மாத இறுதியில் புதிய பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.