புதுக்கோட்டை சிறுமி கொல்லப்பட்டதை போன்று, திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் சிபிசக்கரவர்த்தி, டி.எஸ்.பி. கோகிலா, எஸ்.பி. ஜீயாவுல்ஹக், டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி அருகே 9- ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குற்றாவாளிகளை பிடிக்க போலீஸ் ஒரு பக்கம் தீவிர விசாரணையில் இருக்கின்றனர். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்தோ, அநீதியோ இழைக்கப்பட்டால் சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்து விசாரணை செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி, அல்லது அங்கு உள்ள சுழ்நிலை குறித்து விசாரிக்க வேண்டிய திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட துறைகளான,
DCPU- மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு.
CMPO- குழந்தை திருமண தடுப்பு அலுவலர்.
CWC- குழந்தைகள் நல குழு
ACTU- குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு.
CHILDLINE 1098 - குழந்தைகள் உதவி எண் 1098.
JJB - இளம் சிறார் நீதி வாரியம்.
PO - நன்னடத்தை அலுவலர்..
இவர்கள் அனைவரும் குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய அதிகாரிகள். ஆனால் நேற்று சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எட்டரை அதவத்தூர் பாளையம் அருகே 14 வயது சிறுமி சந்தேகிக்கும்படி, இறந்து கிடந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த அதிகாரிகள் யாரும் தகவல் தெரிந்தும் நேரில் சென்று பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.