Skip to main content

சிகிச்சை முடிந்தது; வீரப்பனின் அண்ணன் மீண்டும் சிறையில் அடைப்பு!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

The treatment was over; Veerappan's brother jailed again!

 

நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தன வீரப்பனின் அண்ணன் மாதையன், உடல்நலம் தேறியதை அடுத்து மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (73) ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். 

 

வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் மாதையன் பாதிக்கப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரப்பட்டது. 

 

கடந்த டிசம்பர் 29ம் தேதி, மாதையனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓரளவு உடல்நலம் தேறியதை அடுத்து, ஜனவரி 6ம் தேதி மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

ஆனால் அடுத்த மூன்று நாள்களில் மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த ஒன்றரை மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததில் உடல்நலம் தேறியது.

 

இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம், மாதையனை புதன்கிழமையன்று (பிப். 16) டிஸ்சார்ஜ் செய்தது. அதன்பிறகு சிறைக்காவலர்கள் பாதுகாப்புடன் அவரை அழைத்துச்சென்று  மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்