நிறுத்திவைக்கப்பட்டுயிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீலை 11 ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி 18ந்தேதி முடிவுற்று ஆகஸ்ட் 5ந்தேதி வாக்குபதிவு எண்ணிக்கை நடைபெற்று, ஆகஸ்ட் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/sxM38wLiourU6VjWS9SrCEhmP7Wf9l4EjLPx8gKCJm8/1562752690/sites/default/files/inline-images/trb.jpg)
இந்த தொகுதியில் முன்பு போட்டியிட்ட அதே வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் ஏ.சி.சண்முகத்துக்காக இந்த தொகுதிக்கான தேர்தல் பணி மேற்பார்வையாளர்களாக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் செய்யவுள்ளார்கள் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தொகுதியின் வெற்றி திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் பெரும் மானப்பிரச்சனையாக உருவாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்று சாதித்துள்ளது. ஒரேயிடத்தில் மட்டும்மே வெற்றி பெற்றதால் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என நொந்துப்போய்வுள்ளனர் அதிமுகவினர். இந்த வேலூர் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவில் அதிமுகவுள்ளது.
இதனால் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும்மென இரண்டு கட்சிகளும் தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்க முடிவு செய்துள்ளன.