கரூரில் நடந்த திமுக எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி பேசும் போது கரூர் தொகுதி எம்பி ஆன தம்பிதுரை தொகுதிக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்க வந்தால் மக்கள் அவர்களை விரட்டி அடிப்பார்கள் என்று பேசினார்.
இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது அவர் செந்தில் பாலாஜி சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது.
அவர் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 12000 கோடி அளவிலான திட்டப் பணிகள் நடைபெறுகிறது. இன்றைக்கு மட்டும் சுமார் 12 கோடி அளவிலான பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்தால் மக்கள் விரட்டி அளிப்பார்கள் என செந்தில் பாலாஜி பேசியது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, விரட்டியடிக்கும் நோக்கில் யார் வந்தாலும் அவர்களை திருப்பி அடித்து ஓட ஓட விரட்டுவோம் என்று ஆவேசமாக பதிலாளித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.