Skip to main content

பக்தர்களை மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது

Published on 10/11/2024 | Edited on 10/11/2024
nn

திருவண்ணாமலையில் பக்தர்களிடம் தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்து வந்த திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த புதுமணத் தம்பதிகள் வழிபாடு செய்துவிட்டு வடஓத்தவாடை தெரு வழியாக தங்கள் இருப்பிடத்திற்கு நடந்து சென்றனர்.

அப்போது, ​​ரீனா மாயாஸ்ரீ தனுஷ்கா  என்ற திருநங்கைகள் ரெட்டியார் பாளையம் காலனி, தண்டராம்பட்டு தாலுகா ஆகிய மூவரும் புதுமணத் தம்பதிகளை வழிமறித்து சாலையிலேயே எலுமிச்சை பழம் சுற்றி போட்டு 5 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.

அந்த மணமகன் திருநங்கைக்கு ரூ.200/- கொடுத்ததாகவும், ஆனால் திருநங்கைகள் அதை வாங்க மறுத்துள்ளனர். அவர் பணம் தர மறுத்ததால் அவர்கள் அவரை கைகளால் தாக்கி, ஆபாசமாக கொச்சையாக சத்தமாக திட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்துள்ளனர்.

இதுப்பற்றி காவல்துறைக்கும் புகார் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார் அங்கு வந்து திருநங்கைகள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திருநங்கைகள் மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது திருவண்ணாமலைக்கு வருகை தரும் அண்ணாமலையார் பக்தர்களையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. காரணம், கடந்த சில மாதங்களாகவே கிரிவலப் பாதை அண்ணாமலையார் கோவில் சுற்றிலும் திருநங்கைகள் திருநங்கைகளின் அட்டகாசம் அளவுக்கு அதிகமாக சென்றுவிட்டது. புதுமண தம்பதிகள் பிற மாநிலத்தவர்களை குறிவைத்து அவர்களை வழி மடக்கி சடங்கு செய்கிறேன் என ஒரு எலுமிச்சம் பழத்தை சுற்றி போட்டுவிட்டு 3000 ரூபாய் கொடு 2000 ரூபாய் கொடு 5 ஆயிரம் கொடு என வாய்க்கு வந்ததை கேட்கின்றனர். அவர்கள் தர மறுத்தால் அவர்களை மிக மோசமாக திட்டுவது என தொடர்கதையாகவே இருந்து வந்தது. அவர்கள் மூன்று, நான்கு பேராக இருப்பது, வெளியூர்காரர்கள் என்கிற காரணத்தால் பயந்துகொண்டு அழுதபடியே செல்வதை உள்ளூர் மக்கள் கவனித்து பரிதாபப்பட்டனர். முதல் முறையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை.

சார்ந்த செய்திகள்