Skip to main content

நீரில் மூழ்கி பள்ளி மாணவரும் தலைமை ஆசிரியரும் பலியான சோகம்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

Tragedy as school student and headmaster drown

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் பகுதியில் எலுவப்பள்ளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 30 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 3ஆம் வகுப்பு படித்து வந்த நித்தின் (வயது 8) என்ற மாணவரும் ஒருவர் ஆவார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராகக் கௌரி சங்கர் (வயது 52) என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நித்தின் இன்று (05.03.2025) மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியின் பின்புறம் 100 மீட்டர் தொலைவில் உள்ள விவசாய தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விவசாய தோட்ட நீர் சேமிப்புத் தொட்டியில் நிதின் விழுந்துள்ளார். உடனடியாக இதனைக் கவனித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கௌரி சங்கர் மாணவனைக் காப்பாற்ற நீர் சேமிப்புத் தொட்டியில் இறங்கி மாணவனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாகலூர் போலீசார் விரைந்து வந்தனர்.

அதன் பின்னர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர், தலைமை ஆசிரியர் என இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்