Published on 24/12/2019 | Edited on 24/12/2019
பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக ட்விட்டரில் பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கியிருப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.