தனியார் தண்ணீர் லாரியை அனுமதிக்க ரூ.100 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்.8ஆம் தேதி சென்னை சித்தாலம்பாக்கம் பகுதியில் பணியில் இருந்த மடிப்பாக்கம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வீதிமிறல் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த தனியார் தண்ணீர் லாரியை மடக்கி பிடித்த அவர் லாரி ஒட்டுநரிடம் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூகவளைதளங்களில் வைராலக பரவியது. அந்த வீடியோ காட்சியில்,
போக்குவரத்து காவலர்: நீ 11 மணி வரை பேசிக்கிட்டே தான் இருப்ப.. உன் வண்டி இங்கிருந்து போகாது என்கிறார்..
அதற்கு அந்த ஒட்டுநர் 50 ரூபாய் தான் இருக்கிறது என்கிறார்..
போக்குவரத்து காவலர்: நான் தான் சொல்கிறேனே.. நூறு ரூபாய் கொடுத்தால் தான் உன் வண்டி இங்கிருந்து போகும். இல்லை என்றால் கிடையாது.. நான் தமிழில் தானே சொல்கிறேன். நானும் மேடவாக்கம், நீயும் மேடாவக்கம். பாஸ்கர் யார் என்று மேடவாக்கத்தில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார் என்கிறார்..
இதுதொடர்பாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், லஞ்சம் வாங்கியதாக பாஸ்கரன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.