பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை ராமையதாஸ் மகன் எடிட்டர் ரவீந்திரன் மரணம்!

பழம்பெரும் பாடலாசிரியர் தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் புதல்வரும் திரைப்படத் தொகுப்பாளருமான ஆர்.ரவீந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று (11.8.20017) மாலை மரணமடைந்தார்.
அவரது உடல் சென்னை கோவூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பாலாஜி நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது.
தகவலறிந்து...திரையுலகப் பிரமுகர்கள் மறைந்த ரவீந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்புக்கு: 9176331718, 9941406042